சஜித் பிராதமரானால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறப் போகும் மஹிந்த அணி வேட்பாளர்

வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைத்த தாம் தயாராகவிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபயகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு எவ்வாறு ஆயுதம் வழங்கினாரோ அதே போன்றே தற்பொழுது அவரின் புதல்வரான சஜித் பிரேமதாச 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் வாயிலாக வடக்கினை பிரிதொதுக்க முயற்சிக்கின்றார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச 113 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் நான் எனது நாடாளுமன்ற உறுப்புரியை இராஜினாமா செய்கின்றேன்.

மேலும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பல காசோலைகளை உத்தியோகப்பூர்வமற்ற முறையில் மாற்றியுள்ளார் எனவும் அந்த காசோலைகளின் இலக்கங்களையும் ரோஹித்த அபயகுணவர்தன தெரிவித்தார்.