சரா என்ற புலஸ்தினி வெளிநாட்டு உளவாளி? வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த வருடம் ஏப்பிரல் 26 ம் திகதி சாய்ந்தமருதுவில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகள் மூலம் அந்த இடத்தில் கட்டுவாப்பிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவி இருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

சரா என அழைக்கப்படும் புலஸ்த்தியா ராஜேந்திரன் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்பது அரசபகுப்பாய்வு திணைக்கள ஆவணங்கள மூலம் தெரியவந்துள்ளது.

அரச பகுப்பாய்வு திணைக்களம் சாய்ந்தமருதில் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகளை குறிப்பிட்ட பெண்ணின் பெற்றோரின் மரபணுமாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இது தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதையும் மரபணு பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.

சரா என அழைக்கப்படும் அந்த பெண் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சாய்ந்தமருது சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் களுவாஞ்சிக்குடியில் பதுங்கியிருந்த பின்னர் படகொன்றில் கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சாரா களுவாஞ்சிக்குடிக்கு தப்பியோடுவதற்கு உதவிய அவரது உறவினர் ஒருவரை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர்.

செல்வக்குமார் உதயகுமார் என்ற அந்த நபர் தற்போது சிஐடியினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்திற்காக பணியாற்றி அந்த பெண் மற்றுமொரு முக்கிய வெளிநாட்டு அமைப்பின் உளவாளியாக பணியாற்றியுள்ளார் என பாதுகாப்பு படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சாரா பிறப்பில் தமிழ் பெண்ணாகயிருந்தபோதிலும் பின்னர் மதமாறினார் அவர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவரை திருமணம் செய்தார் என பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர்.