சற்றுமுன்னர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது

வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.