சற்றுமுன்னர் வெளியான செய்தி – 56 பேருக்கு கொரோனா

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள கைதிகள் மற்றும் பணிக்குகுழுவை சேர்ந்த 56 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள 450 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 56 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலை மாரவில பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும் கொவிட்-19 தொற்றுறுக்கு உள்ளாகியுள்ளார்.

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண்ணொருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.