சற்றுமுன்னர் வௌியான செய்தி; ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கந்தகாடு முகாமில் 252 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு முகாமில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 56 பேருடன் சேர்த்து , மொத்தமாக 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா ரைவஸ் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.