சூடுபிடித்துள்ள புவனேகபாகு மன்னனின் அரசவை உடைப்பு விவகாரம்: வழங்கப்பட்டுள்ள உத்தரவு

வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிவுப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சட்டமா அதிபரினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.