தற்காலிகமாக மூடப்பட்ட வீதி – பொலிஸார் அறிவிப்பு

காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு – காலி பிரதான வீதியில் இன்று கடல் நீர் கரையை நோக்கி பெருக்கெடுத்துள்ளதால், வாகன போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலி பிரதான வீதியில் அம்பாலங்கொடை கஹவ சந்தியில் இருந்து தெல்வத்தை வரையான பகுதி வரை கடல் நீர் கரையை நோக்கி பெருக்கெடுத்துள்ளது.

பிரதான வீதியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது.