துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் பிரேத அறிக்கை வௌியானது

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பெண் குழந்தையின் பிரேத பரிசோதணை அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கொரூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை இதன் போது தெரியவந்துள்ளது.

ஒரு வயதும் நான்கு மாதமுமுடைய பெண் குழந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் மலசலகூட அறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் குறித்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.