தேவையற்ற அச்சம் வேண்டாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் விளக்கம்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் சிலருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் மறுபடியும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முன்னே்றபாடாக பொருட்களை கொள்வனவு செய்வது மாத்திமின்றி அச்சத்திலும் வாழ்கின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் எமது செய்தி பிரிவு காவல் துறை ஊடகப்பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், சிலரால் இவ்வாறான போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவம், அதில் எந்தவித உண்மையம் இல்லை எனவும் பதிலளித்தார்.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவேண்டுமாயில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினூடாக பதில் காவல் துறைமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் காவல் துறை ஊடகப்பேச்சாளரினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், கொரேனா தொடர்பில் போலியான தகவல்களை சமூகத்தில் பரப்பும் தரப்பினரை கண்டறியுமாறு அரசாங்கம் பாதுகாப்பு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மக்களை தேவையற்ற குழப்பங்களுக்கு உட்படுத்தும் வகையிலும் ஏமாற்றும் வகையிலும் போலித் தகவல்கள் பரப்பபடுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கம் விடுமுறை தினத்தை அறிவிப்பதற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலித் தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன.

எனினும், இதுவரை அவ்வாறான எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் போலியான தகவல்களுக்கு ஏமாறாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.