நான்கு நபர்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட ஏனைய நான்கு பேரையும் கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார, நிஷாந்த சேனாரத்ன மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி காலிங்க களுஅக்கல ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பணி நீக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ, பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள் இருவர் உட்பட 4 பேரை கைது செய்ய பிடியாணை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.