நாமலுடன் இணைந்து கொண்ட ஹக்கீம் மற்றும் ரிஷாத்தின் வேட்பாளர்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆதரவு வழங்கு முகமாக, குருநாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குருநாகல் ‘புளூ ஸ்கை’ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ, முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் கல்விக்கான தேசிய இணைப்பாளருமான சாபிர் மன்சூர், மாவத்தகமை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஏ.ஆர்.எம். ரிபால், ‘காந்தா சவிய’ பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில், வடமேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எஸ்.எப். ரமீஸா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் எம்.எச்.எம். ரிஷாட் ஆகியோர் நாமல் ராஜபக் அவர்களினால் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.