நீண்ட நேரம் ஸ்மார்ட் போனில் GAME விளையாடிய தந்தை திடீரென மரணம்

கையடக்கத் தொலைபேசியில் உள்ள கேம் (Game) ஒன்றை அதிகநேரம் விளையாடிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் நேற்று பதிவாகியுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் உள்ள 32 வயதுடைய ஜெயராமன் சுரேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

அதிகாலை 2 மணிவரை அவர் தினமும் கேம் விளையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார் என அவரது மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

குழந்தை ஒன்றுக்கு தந்தையான இவர் அதிக நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது.