பாகிஸ்தானில் புத்தர் சிலையை சேதப்படுத்திய முஸ்லிம் நபர்கள்

பாகிஸ்தானில் புத்தர் சிலையை சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானின் கைபர்பக்துன்கா மாகாணத்தின் தெகாட்பாய் என்ற இடத்தில் உள்ள வயல்வெளியில் அரியவகை புத்தர் சிலை ஒன்று தொல்லியல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிலையை 4 பேர் சுத்தியலால் சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சிலையை சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் புத்தர் சிலையை சேதப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.