பிரதமர் மஹிந்த பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல்

செவனகல பிரதேசத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜகத் புஷ்பமார கூட்டத்தில் உரையாற்ற முற்பட்ட போதே பௌத்த தேரர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு நிலை ஏற்பட்டது.

மோதல் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக்ஷ அவ்விடத்திற்கு வந்துள்ளார்.

உடனடியாக மேடையில் ஏறிய பிரதமர் நாங்கள் அனைவரும் இன்று ஒன்று கூடியுள்ளோம். நமக்குள் மோதல் வேண்டாம் என அங்கு வந்தவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட வேண்டாம் என்றும், தமக்கு வேண்டியவர்களின் இலக்கங்களை மனதில் நினைவு வைத்துக் கொள்ளுமாறும் பிரதமர் கூறினார்.