பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அதிரடித் தீர்மானம்

இன்று மதியத்துடன் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்னல்களுக்கு உட்படுவதை தடுப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அமைச்சர பவித்ரா வன்னியாராச்சி நேற்று கூறியிருந்தார்.

இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நண்பல் 12.30 முதல் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.