பொது மகனுக்கு பொலிஸார் செய்த காரியம் – காட்டிக் கொடுத்த சக பொலிஸார்

மாராவில் – மஹவெவ பகுதியில் அமைந்துள்ள காவல் துறை சோதனை சாவடியில் வைத்து வர்த்தகர் ஒருவரிடம் பலவந்தமாக பணம் பெற முயற்சித்த காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாராவில் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உதவி காவல் துறை பரிசோதகர் மற்றும் காவல் துறை உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகரிடம் 92 ஆயிரம் ரூபா பணத்தையே இவ்வாறு பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி குறித்த சோதனைச்சாவடிக்கு அருகில் விபத்து ஒன்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த மின்விளக்கு உடைந்துள்ளதாகவும், அதனை தொடர்ந்து மின் விளக்கின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியவர் தன்னுடைய சொந்த செலவில் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளார்.

இதன்போது விபத்தை ஏற்படுத்தியவரின் பணப்பை காணாமல் போயுள்ளதாகவும், அது தொடர்பில் அவர் முறைப்பாடுகள் எதனைவும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குறித்த பணப்பையில் காணப்பட்ட பணத்தை கொள்ளையிட்ட உதவி காவல்துறை பரிசோதகர், அவருடன் பணியாற்றிய மற்றும் ஒரு உத்தியோகத்தருக்கு 30 ஆயிரம் பணத்தை கொடுத்து இந்த சம்பவத்தை யாரிடமும் கூறவேண்டாம் எனவும் பணித்துள்ளார்.

30 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட காவல் துறை உத்தியோகத்தர் நடத்த சம்பவத்தை காவல் துறை தலைமையத்தில் தெரிவித்து 30 ஆயிரம் ரூபாவையும் மீள ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறை தலைமையகம் உதவி காவல்துறை பரிசோதகர் மற்றும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.