பொலிஸார் இலக்கு வைத்துள்ள 13 பேர்

பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் 13 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோண் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேல்மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 25 குழுக்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 20 குழுக்கள் தற்போது செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களில் 338 உள்ளனர்.

அவர்களில் 26 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் உத்தரவில் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய பணம் மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் எதிர்காலத்தில் சட்டவிரோத சொத்தகள் குறித்து விசாரணை செய்யும் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.