பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாகப் போலியான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாகப் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். இதுபோன்ற தவறான தகவல்களால் பொது மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் மற்றும் அரசாங்க தகவல் இயக்குநர் ஜெனரல் வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளை மட்டுமே நம்புமாறு அவர் வலிறுயுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 2454 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 463 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.