பௌத்த பிக்குகள் தொடர்பில் பௌத்த மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பௌத்த பிக்குகள் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், பௌத்த மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியாளர்களுக்கு அர்த்தமுள்ள தர்ம உபதேசங்களை வழங்குவதே பௌத்த பிக்குமாரின் கடமையே அன்றி அரச நிர்வாகத்தில் சம்பந்தப்படுவதற்காக நாடாளுமன்றத்திற்கு செல்வதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பௌத்த பிக்குகளை வேட்பாளர்களாகவோ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிட வேண்டாம் என மாநாயக்க தேரர்கள், அனைத்து அரசியலில் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், சில பிக்குகள் இணைந்து தனியான கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களின் இந்த நடவடிக்கையானது மாநாயக்கர் தேரர்களின் நிலைப்பாட்டை மதிக்காத தன்னிச்சையான செயல்.

இதனால், பௌத்த பிக்குமார் எவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.