மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் – பிரதமர்

ஜனாதிபதிக்கு பணியாற்ற இயலாத வகையில் நாடாளுமன்றம் அமையுமாயின், மக்களுக்கே பாதிப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்தையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்தது போன்று, நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துப்படுத்தும் கட்சிக்கு பெற்றுக்கொடுப்பது சிறந்ததாகும்.