மாரவில பெண்ணின் குடும்பத்தினர் 07 பேருக்கு ஏற்பட்ட நிலை

குருநாகல் – மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப அங்கத்தவர்கள் 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக உள்ள நிலையில அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது இன்று உறுதிசெய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலைய ஆலோசகர், கடந்த 3ஆம் திகதி விடுமுறை பெற்று நாத்தண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

மாரவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர் திருமணமாகாத 27 வயதுடைய பெண் ஒருவராகும்.