மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை இதோ!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணத்திற்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டணத்தை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு 2 மேலதிகமாக இரண்டு மாத சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளிவில் அறவிடப்பட்டதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்ணத்தை ஏற்கனவே செலுத்தியிருப்பின், அதற்குரிய பணத்தை மீள வழங்கவோ அல்லது எதிர்வரும் மாதங்களுக்குரிய மின்சாரப் பட்டியலில் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.