மீண்டும் புதிய குற்றச்சாட்டு முன்வைத்துள்ள மஹிந்தானந்த

இலங்கை கிரிக்கட் அணியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்தது தவறு என மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் நிறைவு செய்ததன் மூலம் தவறிழைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கிட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவால் விசாரணை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.