முஸ்லிம்களுக்கான காதி நீதிமன்றத்தை உடனடியாக இரத்து செய்ய கோரிக்கை

முஸ்லிம் விவாகரத்து தொடர்பில் ´காதி நீதிமன்றத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (06) பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை காதி நீதிமன்றம் மற்றும் வன்முறைகளை தூண்டும் மத்ரஸாக்களை ஜமியதுல் உலமா அமைப்பு முன்னெடுத்து வருவதாக வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.