முஸ்லிம்கள் தொழும் திசையாக மெதமுலனவை மாற்றிவிடுவார்கள்

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை, மலிவான விலைகளுக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை “முஸ்லிம் மொட்டுக்கள்” ஆரம்பித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அக்கிரமங்கள், அழிவுகள், அடக்குமுறைகளுக்குப் பரிகாரமாக அரிசி, சட்டி, பானை, தையல் மெஷின்களை வழங்கும் இவர்களின் புதிய போக்குகள், “ஈமான்” மற்றும் “கலிமாவை” அடகு வைப்பதற்கான முயற்சிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களை இவ்வாறு இழிவாக வழிநடத்தி, ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும், இந்த நிலைமை நீடித்தால் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கான திசையாக மெதமுலான அமைந்திருக்கும் பக்கத்தை மாற்றிவிடுவர் என்றும் சாடினார்.