முஸ்லிம் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் முறையை கூறிய அலி சப்ரி

இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை ஹக்கீம் மற்றும் ரிஸாட் பதியுதீனால் பெற்றுக்கொடுக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெறும்பான்மை மக்களின் ஆசிர்வாதத்தினை பெற்ற ஒரு அரசாங்கத்தினாலேயே அவர்களுக்கான தீர்வை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.