முஸ்லிம் மக்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த கூறியுள்ள விடயம்

கட்சி பேதம் இன்றி நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் நடப்பு அரசாங்கத்துடன், இணைந்து செயற்ப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது ஆட்சியின் போது முஸ்லிம்கள் பணத்திற்கு விற்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட இவ்வாறு பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.