மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக மத அடிப்படைவாதிகளுடன் இணைய மாட்டோம்

புதிய அரசாங்கத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக மத அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும் கூட்டணியமைத்துக் கொள்ளமாட்டோம் என்று உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எமது நாட்டில் புரையோடியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பகிரங்கப்படுத்தியது.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அப்போதைய அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டார்கள்.

எமது ஆட்சியில் இவர்கள் நிச்சயம் கைது செய்யபட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்றதொரு தினமான 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதியன்றே நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்தாகவும், அப்போது நல்லாட்சி அரசாங்கம் சகல நாடுகளினதும் ஆதரவரை பெற்றுக்கொண்ட ஒரு கருங்கல்லை போல உறுதியாகவே இருந்ததெனவும் தெரிவித்தார்.