மூன்று பொலிஸ் அதிகாரிகளை மோதிச் சென்ற டிப்பர் வாகனம் சிக்கியது

மாத்தறை, ஹக்மன, கொங்கல பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரன்ன, கட்டக்கடுவ, கொடயிம்பரகம பகுதியில் வீடொன்று அருகில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த டிப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) குறித்த லொறி மோதிய சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், அதில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார்.

ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹக்மன – கோன்ஹல பகுதியில் காவல்துறை வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களை பாரவூர்தி ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 6 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.