ராஜாங்கனை பிரதேசத்திற்கு விதிக்கப்பட்ட தடை

ராஜாங்கனை இலக்கம் 01,03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலையை அடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.