லண்டனில் மகளை கொலை செய்து விட்டு உயிருக்குப் போராடும் தாய்

லண்டனில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கொலைக்கான உரிய காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் தாயும், மகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மகள் உயிரிழந்துள்ளதாகவும், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வயது நிரம்பிய சாயகி என்னும் சிறுமியே இவ்வாறு தாயினால் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது