வட்ஸ் அப் ஊடாக பாலியல் தொழில் – கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள்

வட்ஸ் அப் தொழிநுட்பம் ஊடாக பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, நடமாடும் பாலியல் தொழிலை நடத்தி வந்த நபர் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களை தாம் இன்று கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயணித்த கார் ஒன்றையும் தான் கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய கல்கிஸ்சை பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகேவின் பணிப்புரைக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் சில தினங்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.