வஹாப் பயங்கரவாதத்தை ஒழிப்பதும் அடிப்படைவாதிகளின் உருவாக்கத்தை தடுப்பதும் ஜனாதிபதியின் பொறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலையில் மிகப்பெரிய பொறுப்புக்களை சுமத்தியே நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக நியமித்துள்ளனரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு ​மேலும் கருத்துரைத்த அவர்,

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷ மிகப்பெரிய பாரங்களை சுமந்துகொண்டே நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கறினார்.

வஹாப் பயங்கரவாதத்தை ஒழிப்பது, நாட்டில் அடிப்படைவாதிகள் உருவாகும் சூழலை இல்லாமல் ஒழிப்பது, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புக்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டன என்றும் தெரிவித்தார்.

அரசமைப்பு திருத்தம் என்ற பேரில் அரசாங்கத்தை முடக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே அவர் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

அந்த கொள்கையுடன் செயற்படகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தால் மாத்திரமே அது சாத்தியப்படும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.