வீடொன்றில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

வலஸ்முல்ல-போவல பிரதேசத்தில் வீடொன்றில் நிலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ சீறுடைகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவற்றை காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் நேற்று (20) கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இராணுவ சீருடையில் பொறிக்கப்படும் சின்னங்கள், டீ56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள், கூர்மையான ஆயுதங்கள் சிலவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த வீடு பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையின் போது, 57 வயதுடைய வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.