வீடொன்றில் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த UNP வேட்பாளர் கைது

வாள் தடி மற்றும் அச்சுறுத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டில், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குளியாப்பிட்டி காவற்துறையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வேட்பாளர் சில நபர்களுடன் கிதலவ – எத்தறுவ பிரதேச வீடு ஒன்றில் நுழைந்து அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வேட்பாளர் குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.