வேட்பாளர்களுக்கு மஹிந்த தேஷப்பிரியவின் அதிரடி அறிவிப்பு

அரச சொத்துக்களை பயன்படுத்தி மத ஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்களது உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம் 1981 இல் 79 ஆம் பிரிவின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் எனவும் தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் அரச வாகனங்களை பயன்படுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரச சொத்துக்களை தவறபக பயன்படுத்துவதை தவிர்த்து செயற்பட வேண்டும் என்பதுடன் அது கடுமையான தேர்தல் மோசடியாகும் எனவும் தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்