​கொரோனா பரவல் – உலக சுகாதார தாபனத்தின் கடுமையான எச்சரிக்கை

சர்வதேச அரசாங்கங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்காது போனால் கொரோனா வைரஸ் தொற்றின் பெரும்பரவல் மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டெட்ரொஸ் அதநொம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா பெரும்பரவல் விடயத்தில் பல நாடுகள் பிழையான பாதையில் பயணிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்காதுபோனால் பரவல் அதிகரிப்பை தடுக்கமுடியாது.

இதேவேளை நாடுகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் கொரோனா தடுப்பு விடயங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச்செய்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவன பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்களின் ஒரே எதிரியாக கொரோனா இருக்கின்றபோது அரசாங்கங்களினதும் மக்களினதும் நடவடிக்கைகள் அதற்கு எதிரானதாக அமையவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனப்பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.