08ம் வகுப்பில் சித்தியடையாத தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்

மக்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் ஆட்சி அதிகாரத்தை நீண்டகாலம் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 8 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறுகிறார். அவர் கூறிய பின்னரே இந்த தகவலை நான் அறிந்துக்கொண்டேன்.

வேட்பாளர் பட்டியல்களை பாருங்கள். உயர்தரத்திலாவது தேர்ச்சியடைந்துள்ளார்களா என்று தேடிப்பாருங்கள் என ஹரின் பெர்னாண்டோ வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.