25 பாதாள உலக குழுக்கள் – 388 உறுப்பினர்கள் – அதிரடிக்கு தயாராகும் பொலிஸ்

மேல் மாகாணத்தில் இயங்கும் 25 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களின் 388 உறுப்பினர்கள் தொடர்பில் அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

மேல் மாகாணத்தில் உள்ள 53 காவல்துறை நிலையங்களுக்கும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும்
இதன்போது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய வெளிநாடுகளிலிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சிறைசாலைகளில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் அங்கத்தவர்கள் தொடர்பில் அனைத்து காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதன்போது தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு மாத காலப்பகுதிக்குள் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளும், இது தொடர்பான விசாரணைகளின் மேம்பாட்டு அறிக்கையை கையளிக்க வேண்டும் என்றும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது