பிறந்த நாள் கொண்டாடிய குருணாகல் மேயரால் ASP உடனடி இடமாற்றம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்பட்ட விருந்துபசாரம் ஒன்றில் கலந்துக் கொண்ட குருணாகல் உதவி காவல்துறை அத்தியட்சகரை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

குருணாநாகல் நகர முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வொன்றினையடுத்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றிலேயே குறித்த உதவி காவல்துறை அத்தியட்சகர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.