அசேல சம்பத் மீண்டும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம்

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனையடுத்து அவரை நீதிமன்றில் இன்று(26) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *