அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்று இரவில் வௌியானது

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரால் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளது.

சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இதன்படி அந்த அதிகாரசபையின் பதிவின்றி எந்தவொரு அரிசி உற்பத்தியாளர்களுக்கும், நெல் ஆலை உரிமையாளர்களும் இருப்புக்களை வைத்திருக்க முடியாது.

மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.