அமைச்சர் விமலின் சட்டவிரோத உத்தரவுகளால் பதவி விலகிய அதிகாரி

அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் பதவி விலகியதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இராஜினாமா செய்ய தனக்கு அனுமதி அளிக்குமாறு அனுஷ பெல்பிட்ட ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நிதி தொடர்பான ஒழுக்கம் கிடையாது எனவும் அவரது சட்டவிரோத உத்தரவுகளை செயற்படுத்த முடியாது எனவும் அனுஷ கூறியுள்ளார்.

அதனால் அரச சேவையில் இருந்து பதவி விலகுவதை தவிர மாற்று வழி தனக்கு இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *