ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனைக்கு அனுமதி

இணையத்தளம் (ஆன்லைன் மூலம்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்பொருள் அங்காடிகளில் இருந்து ஒன்லைன் மூலம் மதுபானம் கொள்வனவு செய்யும் முறை ஒன்றை ஏற்படுத்தி தருமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *