எச்சரிக்கை – இப்படியான அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம்

இன்றைய செய்திகள் இலங்கை – இன்றைய செய்திகள் இலங்கை

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடி குறித்து காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், குறித்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்திற்கான பயண செலவை வைப்பிலிட வேண்டும் என குறித்த மோசடியாளர்கள் கோருகின்றனர்.

இல்லாவிடின், குறித்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகைத்தரவேண்டும் என்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமாற வேண்டாம் என்றும் அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

மின்னஞ்சல் மற்றும் அலைபேசி, தொலைபேசி அழைப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் போலியான அழைப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பரிசு பொருட்கள் உள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்துமாறு மின்னஞ்சல் மற்றும் அலைபேசி அழைப்புகள் வந்தால் அது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *