இலங்கை கிரிக்கட் வீரர்களின் செயல் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள விடயம்

இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவரின் சமூக ஊடங்களில் வைரலாகியுள்ள சர்ச்சைக்குறிய வீடியோ தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் நேரத்தையும் முதலீடு செய்யலாம்.

இருப்பினும், நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது.

இந்த வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *