இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவரின் செயல்; உடனடி விசாரணை – வீடியோ

இலங்கை கிரிக்கட் வீரர் களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்படி இருவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இவ்வாறு திருப்பியழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் அணி முகாமையாளரிடம் அறிக்கையொன்றும் கோரப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்தில் பாதுகாப்பற்ற விதத்தில் உலாவும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையானவையா? அல்லது பொய்யானவை? என்பது தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *