இலங்கை கல்வித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்

இலங்கை பாடசாலைகளில் ஆங்கில மொழி மூல கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில மொழி மூல கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சாத்தியங்களை ஆராய நிபுணர் குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதல் முறையாக செயற்படுத்துவதற்கு நுகேகொடையில் அமைந்துள்ள விஜயராம மகா வித்தியாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இதனூடாக ஒருபோதும் தாய்மொழி மூலம் கல்வி கற்கும் சந்தர்ப்பம் இல்லாமலாகாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.