இவர் சீனர் அல்ல – இவர் இஸ்லாமியர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில் படமொன்றை பதிவேற்றியுள்ளார்.

அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என, கேள்வியும் எழுப்பியுள்ளார்.

எனினும், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜையல்ல எனத் தெரிவித்துள்ள குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் ராமநாதன், அவர், இலங்கையர், இஸ்லாமிய சகோதரர், அவரடைய பெயர், மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிஃபா எனக் கூறியுள்ளார்.

அக்கரைப்பற்று குததனாயில் திருமணம் செய்து, அம்பானில் குடியேறி, வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார் எனக் தனது டுவிட்டர் தளத்தில் பதி​வேற்றியுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் எம்.பி, “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர், இலங்கையர் என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன்.

எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *