சமுதித்தவுக்கு வந்த சிக்கல்; இரண்டு வழக்குகள் – சந்திமால் அதிரடி

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு எதிராக நீதிமன்றதை அவமதித்ததாகவும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திமால் ஜயசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திமால் ஜயசிங்கவின் சட்டத்தரணி மஞ்சு ஶ்ரீ சந்திரசேன கூறினார்.

சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றவர்கள் மற்றும் தனக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சமுதித்த சமரவிக்ரம நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அவர் கூறினார்.

இதுதவிர முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவௌியை பேணாமலும் யூடியுப் நேர்முக நிகழ்ச்சிகளை நடத்தியதற்கு எதிராகவும் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு எதிராக சந்திமால் ஜயசிங்கவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த முறைப்பாடுகள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பாரத்துள்ளதாக சந்திமால் ஜயசிங்கவின் சட்டத்தரணி மஞ்சு ஶ்ரீ சந்திரசேன கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *